மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி! - virudhunagar
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 22 ஏக்கரில் ரூ.380 கோடியில், அரசு மருத்துவக் கல்லுாரி கட்டுமானப் பணிகள் நிறைவடையவுள்ளன. வரும் ஆகஸ்ட் மாதம் 150 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான சேர்க்கையும் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மாவட்ட வனத்துறை மூலம் பல வகையான மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று (ஜூன்.3) மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணி முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.