உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா! - World Environment Day
திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த புதுப்பேட்டை காட்டூர் பனந்தோப்பு கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுப்பேட்டை இயற்கை மீட்பு அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா இன்று (ஜூன்5) நடைப்பெற்றது. இந்த நிகழ்வை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் நினைவின் அடையாளமாகச் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு 5059 மரக்கன்றுகளை நட்டனர்.