கனமழையால் வெள்ளத்தில் தவிக்கும் திருப்பத்தூர் நகராட்சி - திருப்பத்தூர் நகராட்சி
திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சில நாள்களாக பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நீர் சூழ்ந்துள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க கூட வெளியேற முடியாமல் மக்கள் தவித்துவருகின்றனர். இதுகுறித்து அறிந்த நகரமன்ற தலைவர் சங்கீதா காவலர்களுடன் இணைந்து, அத்தியாவசிய பொருள்களை வழங்கினர்.