நீட் விலக்குக்கு 'நோ' சொல்லும் மத்திய அரசு - ராகுல் ஆவேசம் - ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் காரசாரம்
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பேசினார். இதில், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை எனப் பல விவகாரங்கள் குறித்துப் பேசினார். தமிழ்நாட்டில் உங்களால் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது என்று அசுர நம்பிக்கையுடன் சொல்லும் அவர், நீட் தேர்வு விலக்கிற்கான தமிழ்நாட்டின் கோரிக்கையைத் திரும்பத் திரும்ப மத்திய அரசு நிராகரித்துவருகிறது. இந்தக் கட்டமைப்பில் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படுகிறது என்று கூறினார்.