தேனி கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை - தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட் ராஜ்
தேனியைச் சுற்றியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்றிரவு (ஆக.30) பெய்த கனமழையின் காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி, கொடைக்கானல் வட்டக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மேற்குத் தொடர்ச்சியில் இருந்து அதிகளவில் நீருடன் கற்கள், பாறைகள் விழும் அபாயம் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கருதி அருவிக்கு செல்லத் தடை விதிப்பதாக தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட் ராஜ் அறிவித்துள்ளார்.