தூய்மைப் பணியில் பிரியங்கா காந்தி: வைரலாகும் காணொலி - பிரியங்கா காந்தியின் வைரல் வீடியோ
உத்தரப் பிரதேசத்தில் வன்முறையில் பாதிக்கப்பட்ட உழவரின் குடும்பத்தைக் காணச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கெரி மாவட்டம் லக்கிம்பூர் பகுதியில் காவல் துறையினரால் தடுக்கப்பட்டார். பின்னர் லக்னோவிலிருந்து 90 கி.மி. தூரத்திலுள்ள சீதாபூரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அங்கு அவர் இருக்கும் அறையை பெருக்குவது போன்ற காணொலி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.