'இயக்குநர் என்ன ஆசைப்பட்டாரோ என்னை வைத்து செய்துவிட்டார்' - பிரபு தேவா - பிரபு தேவா பேச்சு
நடிகர் பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள, பஹீரா படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (அக்.8) நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் பிரபு தேவா கலந்து கொண்டு மிகவும் நகைச்சுவையாகப் பேசினார். மேலும் இயக்குநர் படத்தில் என்னவெல்லாம் வைக்கவேண்டும் என ஆசைப்பட்டாரோ அவை அனைத்தையும் என்னை வைத்துச் செய்துவிட்டார் எனச் சிரிப்புடன் தெரிவித்தார்.