வீடியோ: கஞ்சா பாய்ஸை ரவுண்டு கட்டிய லோக்கல் பாய்ஸ்! - கஞ்சா போதையில் கத்தியுடன் சுற்றிய இளைஞர்கள்
கோயம்புத்தூரில் கஞ்சா போதையில் ஊருக்குள் அரிவாள், கத்தியுடன் சுற்றித் திரிந்த இளைஞர்களை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து சரமாரியாக அடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கிட்டத்தட்ட 3 மணிநேரம் நடந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேருக்கும் பொதுமக்கள் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இளைஞர்களை பொதுமக்கள் விரட்டிபிடித்த காட்சி தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளது.