மதுரையிலும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - Petrol bomb hurled
கோவை, ஈரோடு, சென்னையை தொடர்ந்து மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியிலுள்ள ஆர்எஸ்எஸ் பிரமுகர் கிருஷ்ணன் என்பவரது வீட்டில் மர்ம நபர்கள் இன்று (செப்.24) பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசினர். இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச் சென்ற காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளன.