பவானிசாகர் அணையில் நீர் திறப்பு... செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்... - பவானிசாகர் அணையில் நீர் திறப்பு
ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து மேல் மதகுகள் வழியாக வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த, பொதுமக்கள், அணை முன்புள்ள பாலத்தின் மீது நின்று அணையில இருந்து உபரி நீர் வெளியேறும் காட்சியை கண்டு ரசித்து, குடும்பத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மேலும், பவானி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படுவதால், வெள்ள நீர் ஓடும் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என நீர்வளத்துறை அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.