மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோயில் தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற்றது. - பரிமளரெங்கநாதர் கோயில் தெப்போற்சவம்
பஞ்ச அரங்க ஆலையங்களில் 5ஆவது ஆலையமாகவும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22ஆவது தேசமாகவும் விளங்குகிறது மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோயில். பள்ளி கொண்டநிலையில் பெருமாள் அருள்பாலிக்கும் இந்த கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்று பங்குனி தெப்போற்சவம். மார்ச் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று(ஏப்.8) நடந்தது. ஆலய சந்திரபுஷ்கரணி தீர்த்தத்தில், மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், பெருமாள், தாயாருடன் எழுந்தருளினார். 3 சுற்றுக்கள் நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்