திருக்கோஷ்டியூருக்கு ரதத்தில் வந்த பிரம்மாண்ட பள்ளிகொண்ட பெருமாள் - மாயோன்
சிவகங்கை:திருக்கோஷ்டியூரில் நேற்று (ஜூன் 15) பிரம்மாண்ட ரதத்தில் எழுந்தருளிய பள்ளிகொண்ட பெருமாள் சிலையை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். பிரம்மாண்ட ரதத்தில் 12 அடி நீளம், 6.5 அடி உயரம் கொண்ட பள்ளி கொண்ட பெருமாள் சிலை அமைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பக்தர்கள் பார்வைக்காக வலம் வருகிறது. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோவில் முன்பு நிறுத்தப்பட்ட பள்ளிகொண்ட பெருமாள் சுவாமிக்கு மலர் மாலைகள் சாற்றி, உதிரிப்பூக்கள் கொண்டு அர்ச்சனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
Last Updated : Jun 16, 2022, 1:50 PM IST