ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு! - ஈடிவி செய்திகள்
🎬 Watch Now: Feature Video
தர்மபுரி: பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில், கடந்த இரு மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து 2500 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு அணைகளில் இருந்து திறந்தால் நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை க்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.