பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு - பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை, கோட்டூர், ஆழியார் உள்ளிட்ட பகுதிகளில் நடப்பு பருவத்தில் முதல் போகம் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆழியார், அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் படி, நேற்று (மே 16) ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு வாய்க்கால்களுக்கு நீர் திறக்கப்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.