துணிப்பையை தூக்கிட்டு போனா குறுகுறுகுறுனு பார்ப்பாங்க... ஓ சொல்றியா மாமா...! ஓகே சொல்றியா மாமா...! - துணிப்பை
தேனி மாவட்ட தன்னார்வலர்கள் அமைப்பின் சார்பாக பனை நடவு திருவிழா, ஆணி பிடுங்கும் திருவிழா போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பையை அனைவரும் பயன்படுத்தி இயற்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் "துணிப்பையை தூக்க துணிவோம்" என்றபெயரில் விழிப்புணர்வு பிரசார பாடலை தயாரித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் துணிப்பை பற்றிய விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.