திருத்தணி அருகே ஸ்ரீ முத்துராட்ச அம்மன் கோயில் குடமுழுக்கு - Temple kumbabisekam
திருவள்ளூர்: திருவாலங்காடு அருகே வீரராகவபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துராட்ச அம்மன், ஸ்ரீ அங்காளம்மன், நவகிரக ஆலயத் திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. இதற்காக நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டு, புனித நீர் மங்கலவாத்தியங்கள் முழங்க கோபுரத்தின் மேலயுள்ள கலசத்தில் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு வெகு விமரிசியாக நடத்தப்பட்டது.