நத்தம் மீன்பிடி திருவிழா, மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்! - திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் குளத்தில் இறங்கி மீன்களை அள்ளிச் சென்றனர். நத்தம் அருகே உள்ள மொட்டயகவுண்டன்பட்டி கிராமத்திற்கு சொந்தமானது செங்குளம். இந்தக் குளத்தில் ஆண்டுதோறும் மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். சமீபத்தில் பெய்த மழையால் இந்த குளத்தில் நீர் தேங்கி இருந்ததால் மீன்கள் வளர்க்கப்பட்டன. தண்ணீர் குறைந்ததை அடுத்து இக்குளத்தில் மீன்பிடி திருவிழாவானது நடைப்பெற்றது. இந்த மீன்பிடி திருவிழாவில் திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கலந்துக்கொண்டனர். விரால், கெண்டை, ரோகு, கட்லா, கெளுத்தி உள்ளிட்ட பலவகையான மீன்களை ஆண்கள், பெண்கள் எனப் பொதுமக்கள் அனைவரும் அள்ளிச் சென்றனர்.