பள்ளிப்பேருந்தில் தீ விபத்து... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தைகள்! - டெல்லி பேருந்து விபத்து
டெல்லி ரோகினி சாலையில் 21 குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த பள்ளிப்பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பேருந்து ஓட்டுநர் சமயோஜிதமாக செயல்பட்டு, குழந்தைகளை பத்திரமாக மீட்டார். மேலும் மளமளவென தீ பரவியதால், அருகில் இருந்த வாகனங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்குச்சென்று தீயைக்கட்டுப்படுத்தினர். பின்னர் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.