இன்று உலக புலிகள் தினம் - 4 அழகிய புலிக் குட்டிகளுக்கு பெயர் சூட்டிய பிகார் அரசு - இன்று உலக புலிகள் தினம்
பிகார்: பாட்னாவில் உலக புலிகள் தினத்தையொட்டி, அங்குள்ள உயிரியல் பூங்கா 2 மாதங்களுக்கு முன் சங்கீதா என்ற புலி ஈன்ற 4 அழகிய குட்டி புலிகளுக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் நீரஜ் குமார் சிங் கலந்து கொண்டார். அப்போது அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் காணொலி வாயிலாக புலிகளுக்கு விக்ரம்,கேசரி, மகதா மற்றும் ராணி என பெயர் சூட்டினார்.