CSK: கடைசிப்போட்டி சென்னையில்தான் - சிறப்புரை ஆற்றிய 'தல' தோனி - பாராட்டு விழா
கலைவாணர் அரங்கில் நடைபெற்றுவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பாராட்டு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இவ்விழாவில் தோனி பேசியதாவது, "2008ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததில் இருந்து சென்னை மீதான உறவு எனக்குத் தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டி நான் விளையாடியது சென்னையில்தான், அப்போதே தொடங்கியது சென்னையுடனான என் பந்தம். சென்னையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியின்போதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவும் அன்பும் மிகப்பெரியது. சென்னை அணியின் ரசிகர்களின் பலம் தமிழ்நாட்டைச் சார்ந்தது மட்டுமல்ல, அதையெல்லாம் கடந்தது. என்னுடைய கடைசிப் போட்டியும் சென்னையில் தான். அடுத்த ஆண்டோ அல்லது ஐந்து ஆண்டுகள் கடந்தாலும் கூட அது சென்னையில் வைத்துதான்" என புன்னகை பூத்த முகத்துடன் உரையை நிறைவுசெய்தார்.