Viral Video - மான் மீது சவாரி செய்யும் குரங்கு - கர்நாடக மாநிலம்
ஷிவமொக்கா (கர்நாடகா): ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள குவெம்பு பல்கலைக்கழக வளாகத்தில் குரங்கு ஒன்று மான் மீது சவாரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்கலைக்கழக வளாக கட்டடத்தின் பின்புறத்தில் ஒரு குரங்கு மான் மீது சவாரி செய்கிறது. இந்தக் காட்சியை அங்கிருந்த ஊழியர்கள் படம் பிடித்துள்ளனர்.