சென்னை ரிப்பன் மாளிகையில் தேசிய கொடி ஏற்றிய மேயர் பிரியா - சென்னை மாநகராட்சி சிறப்பாக பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
சென்னை : 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று (ஆக.15) சென்னை மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றினார். இதனைத்தொடர்ந்து முறையாக வரி செலுத்திய 6 பேருக்கு மேயர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 80 பணியாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.