45 விநாடிகளே... பரதநாட்டியத்தில் 6 வயது சிறுமி சாதனை! - 45 விநாடிகளில் பரதநாட்டியத்தின் 73 முத்திரைகளை செய்து சாதனை
மயிலாடுதுறையைச் சேர்ந்த எம். ரக்ஷிதா என்ற 6 வயது மாணவி பரதநாட்டியத்தில் உலக சாதனை புரிந்துள்ளார். மயிலாடுதுறை அபிநயா டான்ஸ் அகாதமியின் குரு உமா மகேஸ்வரியின் மாணவியான ரக்ஷிதா, தமிழ்நாட்டின் பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தின் 73 முத்திரைகளை வாய்மொழியாலும், கண் அசைவினாலும், கை முத்திரைகளைச் செய்துகாட்டி சாதனை படைத்துள்ளார். இதை மாணவி ரக்ஷிதா 45 விநாடிகளுக்குள் பதிவுசெய்துள்ளார். இவரது திறமையைப் பாராட்டி கலாம் உலகச் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இன்று (ஜனவரி 8) காலை 10.15 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இந்தச் சாதனையைப் படைத்தார்.