சம்பள உயர்வு இல்லை... தொழிற்சாலை சிம்னி மீது ஏறி ஊழியர் தற்கொலை முயற்சி - சம்பள உயர்வு
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர், பணி விரக்தியில் தொழிற்சாலை புகைப்போக்கி ( Chimney ) மீது ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த பவானி எரெக்டர்ஸ் நிறுவனத்தின் கீழ் பணியாற்றி வருபவர் சன்னா சுகப்பா. கடந்த பல ஆண்டுகளாக இந்த அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நிறுனவத்தில், உகுந்த சன்மானம், போனஸ் போன்றவை வழங்காததை கண்டித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.