Video: கழுதையிடம் மனு அளிக்கும் நூதனப் போராட்டம் - மக்கள் ஜனநாயக கட்சியினர் கழுதையிடம் மனு அளிக்கும் நூதனப் போராட்டம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இ-3 சாலையை உடனடியாக திறக்க வேண்டும், புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இலவச கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர் நிலைகளை மீட்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மக்கள் ஜனநாயக கட்சியினர் சார்பில் இன்று (ஏப்.26) கழுதையிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை சாலை, பஜார், எம்.எஸ்.கார்னர், திருச்சுழி ரோடு உள்ளிட்டப் பகுதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலக வாயிலில் கோரிக்கை மனுவை மக்கள் ஜனநாயக கட்சியினர் கழுதையிடம் வழங்கினர்.