திருவாரூர் சொர்ண மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா - நன்னிலம் மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
திருவாரூர் மாவட்டம் நன்னிலம், மாப்பிளைகுப்பத்தில் பழமைவாய்ந்த சொர்ண மகா காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நான்கு கால பூஜைகள், வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் விழா இன்று (ஜூன் 18) நடைபெற்றது. இதில் 1500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.