மதுராந்தகம் ஏரி திறப்பு! - மதுராந்தகம் ஏரி
செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி 23.4 அடி ஆழமுடையது. இந்த ஏரிக்கு, கிளியாறு, நெல்வாய் மடு ஆகியவற்றின் மூலமாக நீர் வருகிறது. தொடர்ந்து பெய்துவரும் மழையால், இந்த ஏரி தனது முழுக் கொள்ளளவை எட்டிவிட்டது. இதனால், தற்போது ஏரியின் அவசரகால மதகு திறக்கப்பட்டு, விநாடிக்கு, 2300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. மதுராந்தகம் ஏரியிலிருந்து வெளியேறும் நீர் கிளியாற்றின் வழியாகக் கடலில் கலக்கிறது. இந்நிலையில், ஏரி நீர் வெளியேறும் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு மாவட்ட நிர்வாகம், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது.