தெங்குமரஹாடா வனப்பகுதியில் சிறுத்தை விடுவிப்பு! - கல்குவாரியில் பதுங்கிய சிறுத்தை
ஈரோடு அருகே தாளவாடி மலைப்பகுதி ஓசூர் கிராமத்தில் உள்ள செயல்படாத கல்குவாரியில் பதுங்கிய சிறுத்தை அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடியது. தொடர்ச்சியாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தையைக் கூண்டு வைத்துப்பிடிக்க வேண்டும் எனப்பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததைத்தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்தனர். இந்த கூண்டில் நேற்று(ஜூன்30) சிறுத்தை சிக்கியது. வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வாகனத்தில் ஏற்றி பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியான தெங்குமரஹாடா வனப்பகுதிக்கு கொண்டு சென்று இன்று(ஜூலை01) அதிகாலை வனப்பகுதியில் விடுவித்தனர்.