Video:மதில் சுவரில் ஹாயாக நடந்து சென்ற சிறுத்தை... வாகன ஓட்டிகள் அச்சம் - வாகன ஓட்டிகள் அச்சம்
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தில் சத்தியமங்கலம் செல்லும் சாலையோரம் அமைந்துள்ள மதில் சுவரில் சிறுத்தை படுத்தபடி ஓய்வெடுப்பதை கண்ட அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சிறிது நேரம் மதில் சுவர் மீது ஜாலியாக படுத்திருந்த சிறுத்தை, பின்னர் மெதுவாக எழுந்து, மதில்சுவர் மீது அங்குமிங்கும் நடமாடியது. அதனையடுத்து சிறுத்தை வனப்பகுதியில் தாவிக்குதித்து ஓடி மறைந்தது. பண்ணாரி அம்மன் கோயில் வளாகத்தில் சிறுத்தை நடமாடியதால் பக்தர்கள் இரவு நேரத்தில் நடைபயணம் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.