தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை - தொழிலாளர்கள் அச்சம் - தேயிலை தொழிலாளர் அச்சம்
கேரளா: மூணாறில் தனியார் தேயிலை தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் இன்று (ஜூலை 6) காலை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த சிறுத்தை ஒன்று அங்குள்ள மரத்தின் மீது எறியது. தொடர்ந்து சிறிது நேரத்தில், மரத்திலிருந்து இறங்கி வனப்பகுதிக்குள் ஓடியது. இதையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.