தொடர் மழை; வால்பாறையில் சரிந்து விழுந்த வீடுகளின் சுற்றுச் சுவர் - Landslide in residential area in Valparai
கோவை: வால்பாறையில் பெய்த கனமழையால் நகராட்சி கால்பந்தாட்ட மைதானம் அருகே குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதியிலுள்ள மாரியம்மாள், ஜோசப் மேரி ஆகியோரின் இரண்டு வீடுகளின் தடுப்புச் சுவர், நேற்று முன் தினம் (ஜூலை4) இடிந்தது. இதனை வால்பாறை நகராட்சி மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, வட்டாட்சியர் விஜயகுமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.