ஈரோடு அருகே பெரியகாண்டியம்மன், அண்ணமார் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா - ஏராளமானோர் சாமி தரிசனம்! - பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வெள்ளோடு கிராமத்தில் உள்ள பெரியகாண்டியம்மன், அண்ணமார்சுவாமி மற்றும் கன்னிமார், விநாயகர், கருப்பண்ணசுவாமி கோயிலில் இன்று (மே 13) மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மகாகணபதி ஹோமம், தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் இன்று (மே 13) காலை விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவினையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
TAGGED:
Temple Festival