சத்தீஸ்கரில் டீசல் திருடும் கும்பல் போலீஸை மிரட்டும் பரபரப்பு வீடியோ! - korba diesel theft viral video
கோர்பா (சத்தீஸ்கர்): சத்தீஸ்கர் மாநிலத்தில் கோர்பாவில் டீசல் திருடும் மாஃபியாக்கள் அதிகரித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக டீசல் திருடும் கும்பல் 2 ஜீப்களில் வந்து கோர்பா சுரங்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேம்பர் வாகனத்தில் டீசலை திருடிவிட்டு செல்கின்றனர். சுரங்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையினர் கும்பலை தடுக்க முயன்றனர். ஆனால் கும்பல் அஞ்சாமல் மத்திய பாதுகாப்பு படையினர் மீது ஜீப்பை ஏற்ற முயன்றனர். பின்னர் மிரட்டியும் செல்கின்றனர். அப்போது மத்திய பாதுகாப்பு படையினர் மண் மேட்டில் ஏறி கும்பலிடம் இருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து பேசும் பொருளாகியுள்ளது.