கொடைக்கானலில் தொடர் மழையால் நிரம்பிய நீர் தேக்கம் - kodaikanal rain
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த வாரமாக பகல் இரவு நேரங்களில் கனமழையானது பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் நீர் தேக்கங்கள் மற்றும் அருவிகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அப்சர்வேட்டரி குடிநீர் தேக்கத்தில் மொத்தம் 22 அடி இருக்கும் நிலையில் மழையின் காரணமாக தற்போது 21 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் மனோரத்தினம் குடிநீர் தேக்கத்தில் மொத்தம் 36 அடி இருக்கும் நிலையில் தற்போது 35 அடி உயர்ந்துள்ளது. மேலும் இரண்டு நீர் தேக்கங்களும் நிரம்பி வருவதால் கொடைக்கானல் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.