மானாமதுரை - கோவில் திருவிழாவில் கிடா சண்டை போட்டி - மானாமதுரையில் கோவில் திருவிழா
சிவகங்கை அடுத்து மானாமதுரை அருகே அ.விளாக்குளம் கிராமத்தில் நிறைகுளத்து அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா முன்னிட்டு கிடா சண்டை நடைபெற்றது.இதில் திண்டுக்கல், மதுரை, தேனி, இராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட கிடாக்கள் பங்கேற்றது. இதில் சம வயதுள்ள கிடாக்கள் சண்டையிடும். 60 முறை போட்டி களத்தில் முட்டி கொள்ள வேண்டும். எந்தக் கிடா அதிக முறை முட்டி கொள்ளுகிறதோ அந்தக் கிடா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.