சந்தோஷமாக இருங்க நடனமாடி நம்பிக்கையூட்டிய அமைச்சர் மகள்! - அண்மை செய்திகள்
பெங்களூரு: பெங்களூரு சப்தகிரி தனியார் மருத்துவமனையில், கர்நாடக கல்வித்துறை அமைச்சரின் மகள் திஷா குமார் மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். மருத்துவர் திஷா குமார், மன அழுத்தத்தில் இருக்கும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்காக நடனமாடி உற்சாகப்படுத்திவருகிறார். பிபிஇ கிட் அணிந்து, சக மருத்துவர்கள், ஊழியர்களுடன் மருத்துவர் திஷா குமார் நடனமாடிய காட்சிகள், தற்போது வைரலாகிவருகிறது.