உள்ளத்தை குளிரவைக்கும் ராஜபானம் - மதுரை சுல்தான்கள்
தமிழ்நாட்டின் நகரங்களில் தனக்கெனத் தனித்த சிறப்புகளையும் அடையாளங்களையும் உடையது மதுரை மாநகர். அத்தகைய சிறப்பு அடையாளங்களில் ஒன்று ஜிகர்தண்டா. மதுரைக்குச் சொந்தமில்லாத இந்த வடக்கத்திய பானம், இன்று, மதுரையில் சாமானியர்களின் ராஜபானமாக மாறி கைகளில் தவழ்ந்து நாவில் ருசிக்கிறது. மதுரைக்கு வரும்போதெல்லாம், ஜிகர்தண்டாவைத் தவறவிடாத வெளியூர் ரசிகர்களைப் போல, இப்பானத்தின் ராஜசுவைக்கு அடிமையாகி, தினமும் ஒருமுறையாவது இதை ருசித்துவிடும் உள்ளூர் ரசிகர்களும் இதற்கு உண்டு. இதன் பழமையான சுவைக்கு, சில பாரம்பரியக் கடைகளை அடையாளம் காட்டுகின்றனர் இந்த உள்ளூர் ரசிகர்கள். அந்த ராஜபானத்தின் கதையிது.
Last Updated : Jun 3, 2021, 7:20 AM IST