அதிமுக அலுவலகம் வந்த ஜெயக்குமார்- அண்ணன் DJ வாழ்க என கோஷம் எழுப்பிய ஆதரவாளர்கள் - அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம்
சென்னை: ஒற்றை தலைமை குறித்த விவகாரம் அதிமுகவில் உச்சத்தை எட்டிய நிலையில், இன்று (ஜூன்18) அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில், அக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்தார். அப்போது ஜெயக்குமாருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.