குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - சூரிய உதயத்தைக் காண முடியாமல் ஏமாற்றம்! - குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா மையமான குமரியில் சூரிய உதயம் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதுண்டு. அந்த வகையில் இன்று (ஜூலை3) வார விடுமுறை தினம் என்பதால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில், சூரிய உதயத்திற்காக காத்திருந்தனர். ஆனால், வானம் மேகமூட்டமாக காணப்பட்டதால் சூரியன் உதிக்கும் காட்சி தெரியவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையே ஒரு புறம் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளித்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.