ஒகேனக்கல்லில் புத்தாண்டு கொண்டாட குவிந்த சுற்றுலா பயணிகள் - ஒகேனக்கல்லில் பரிசலில் சென்று ஐந்தருவி பகுதியில் குளித்தும்
தருமபுரி:புத்தாண்டு விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள், பரிசலில் சென்று, ஐந்தருவியில் குளித்தும், செல்பி எடுத்தும் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியின் அழகை கண்டு ரசித்தனர். விடுமுறை கொண்டாட்டத்திற்காக ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால், சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
TAGGED:
hoganakkal five falls