கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு! - ஈடிவி செய்திகள்
கன்னியாகுமரி: கோதையாற்றில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோர பகுதிகளில் உள்ள அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் அதிகளவு திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவியில் வெள்ளம் அதிகமாக கொட்டி வருகிறது. பொதுமக்கள் குளிப்பதற்காக பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர்கள் சேதமடைந்துள்ளன.