கோவையில் 1 மணி நேரம் பெய்த கனமழை.. போக்குவரத்து பாதிப்பு - School students suffer due to heavy rain
கோவை: மாவட்டத்தில் மாநகரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மாநகரப் பகுதிகளை பொறுத்தவரை லங்கா கார்னர் ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கி நின்றதால் பேருந்தில் வந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். மேலும் அவிநாசி மேம்பாலத்திற்கு கீழும் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.