அசானி புயல்: திருவள்ளூரில் வெளுத்துக் கட்டிய மழை - திருவள்ளூரில் வெளுத்துக் கட்டிய மழை
வங்க கடலில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக, நேற்று (மே 10) திருவள்ளூரில் பல்வேறு பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. கடந்த ஒரு மாதமாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தி எடுத்த நிலையில், தற்போது பெய்ய தொடங்கியுள்ள மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.