தற்காலிக செவிலியர்களை விடுவிக்காமல் மாற்றுப் பணி வழங்க வலியுறுத்தி மனு - கரோனா
கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக சுகாதார செவிலியர்களை வருகிற 30ஆம் தேதியுடன் பணியிலிருந்து விடுவித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்ற கூடிய தற்காலிக சுகாதார செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், தங்களை பணியில் இருந்து விடுவிக்காமல் மாற்றுப் பணி வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.