Video: பேப்பர்களை கொண்டு 4.5 அடி உயரத்தில் விநாயகர் சிலையினை உருவாக்கி அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல் - புதுச்சேரி
புதுச்சேரி: கோரிமேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் ஓவிய ஆசிரியர் கிருஷ்ணன். இவர் மாணவர்களுக்கு கைவினைப்பொருட்கள் உருவாக்கும் பயிற்சியினை அளித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தியையொட்டி மாணவர்களுக்கு விநாயகர் சிலைகளை உருவாக்கும் பயிற்சியை ஓவிய ஆசிரியர் கிருஷ்ணன் அளித்து வந்துள்ளார். இதில் பள்ளியில் உள்ள பயனற்ற பேப்பர்களை கொண்டு விநாயகர் சிலைகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர். 4.5 அடி உயரத்தில் ரசாயனம் எதுவும் இன்றி சிலையை உருவாக்கியுள்ளனர். பயனற்ற பொருட்களைக்கொண்டு கலைநயமிக்க பொருட்களை உருவாக்கிய மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
Last Updated : Aug 31, 2022, 10:08 AM IST