100 அடி உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சியில் குதித்த சிறுமி - சித்ரகோட் நீர்வீழ்ச்சி
சத்தீஸ்கர், மாநிலம் ஜக்தல்பூரின் சித்ரகோட் நீர்வீழ்ச்சியில் சிறுமி ஒருவர் 100 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். (மே20)வெள்ளிக்கிழமை மதியம், சிறுமி அருவியின் முகத்துவாரத்திற்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். தண்ணீர் அலையில் விழந்த சிறுமியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீர்மூழ்கிக் குழுவினர் சிறுமியை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை சிறுமியின் எந்த தடயமும் இல்லை. சிறுமி அருவியில் குதிக்கும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.