திக் திக் நிமிடங்கள்... ஏற்காடு மலைப் பாதையில் விழுந்த ராட்சதப் பாறை... - Yercaud landslide
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஒரு வாரமாக விட்டுவிட்டு மழை பெய்துவருவதால், மலைப்பாதையில் மண் சரிவு, பாறைகள் உருண்டு விழுவது வழக்கமாகிவருகிறது. அந்த வகையில், இன்று (மே 21) 18ஆவது கொண்டை ஊசி வளைவு ராட்சதப் பாறை உருண்டு விழுந்தது. அப்போது வாகனவோட்டிகள் யாருமில்லததால் அசாம்பாவிதம் நடக்கவில்லை. இந்த பாறையை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.