தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி மார்க்கெட்டில் மலைபோல் குவிந்துள்ள குப்பை - மாநகராட்சி மெத்தனம்! - The Corporation is showing reluctance

By

Published : Oct 3, 2022, 6:15 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி மார்க்கெட் பகுதியில் மலைபோல் குவிந்துள்ள குப்பைக்கழிவுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மேலும் சேறும் சகதியுமாய் காணப்பட்டு கால் வைக்க முடியாத சாலையாகவும், துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் மாநகராட்சியின் இந்த மெத்தனப்போக்கினால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று அச்சமும் எழுந்துள்ளது. இந்த ராஜாஜி காய்கறிச் சந்தைக்கான புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு கட்டடப் பணிகளுக்காக தற்காலிக காய்கறிச்சந்தைக்கு செல்ல மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில் கடையின் உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கவே மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளாமல் உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details