வால்பாறை அருகே புலிக்கு வேட்டையாட பயிற்சியளிக்கும் வனத்துறையினர்!
கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரக உட்பட்ட முத்து முடி பகுதியில் 8 மாத குட்டியாக புலி ஒன்று வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்தது. தன்னுடைய தாயிடம் வேட்டையாடும் பயிற்சியை பழகாத காரணத்தினால் மந்திரி மட்டம் பகுதியில் சுமார் ரூ.75 லட்சம் செலவில் தனிக் கூண்டு அமைக்கப்பட்டு, தற்போது 9 மாதங்களாக வனத்துறையினர் பாதுகாத்து வந்தநிலையில் அதற்கு வேட்டையாடும் பயிற்சி அளிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினார். தற்போது அப்புலி வேட்டையாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.