Video: வால்பாறையில் புலிகள் நடமாட்டம்; பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை - கோவை செய்திகள்
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறையில் காட்டுயானை, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டுமாடு, வரையாடு, சிங்கவால் குரங்கு, கருமத்தி, கேளையாடு, கடமான் மற்றும் இருவாட்சி எனப் பல்வேறு பறவை இனங்களும் அபூர்வ தாவரங்களும் உள்ளன. இதையடுத்து வால்பாறை அருகே தனியாருக்குச் சொந்தமான டாடா எஸ்டேட்டில் இன்று (ஏப்.15) பெய்த மழையினால் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 புலிகள் மண் சாலையைக் கடக்கும் வீடியோ சமூக வலைதளைங்களில் பரவி வருகிறது. புலிகள் நடமாட்டம் உள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு அப்பகுதி பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.